எழுத்தின் அளவு: அ+ அ- அ
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் நிர்ணயித்த 106 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் துபாயில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாத்திமா சனா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையத்து முதலில் பேட்டிங் செய்த அந்த அணி வீராங்கனைகள், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 106 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு இந்திய அணி வீராங்கனைகள் பேட்டிங் செய்து வருகின்றனர். முன்னதாக இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், அரையிறுதிக்கு தகுதி பெற எஞ்சிய 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட இந்திய அணி வெற்றியை எதிர்நோக்கி விளையாடி வருகிறது.