மகளிர் பிரீமியர் லீக் : உபி அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் உபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 18வது போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் - உபி வாரியர் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனையடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

varient
Night
Day