மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 9வது மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவும், மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து நியூசிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்க துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 3வது முறையாகும். தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முதல்முறையாக கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Night
Day