எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொந்த வாழ்க்கை குறித்து தவறான தகவலை வெளியிட்டதற்கு முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனி தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியதாக பிசிசிஐ தெரிவித்தது. இந்நிலையில், விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் தங்களுக்கு 2-வது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளதாவும், அதனால் தான் விராட் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விராட் கோலியின் சொந்த வாழ்க்கை குறித்து தவறான தகவலை வெளியிட்டதற்கு முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.