விளையாட்டு
LSG-யை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது CSK
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவதற்காக லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் மார்ச் 7-ந்தேதி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் ராகுல் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. இருப்பினும், வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியிலாவது, லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் களமிறங்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், 4-வது டெஸ்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, அணிக்கு திரும்புகிறார் எனவும், 5-வது டெஸ்டில் அவர் விளையாட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
18வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...