மலேசியா மாஸ்டர்ஸ் - பி.வி. சிந்து இறுதிசுற்றுக்கு தகுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்களை பி வி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். 


கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்தின் புசானனை, சிந்து எதிர்த்து விளையாடினார். 3 செட்கள் நீடித்த இந்த போட்டியில் முதல் செட்டை இழந்தாலும் அடுத்து அபாரமாக ஆடிய சிந்து 13க்கு 21, 21க்கு 16, 21க்கு 12 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் ஷியி-ஐ சிந்து எதிர்கொள்கிறார்

Night
Day