எழுத்தின் அளவு: அ+ அ- அ
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் தேனி அணி வெற்றி பெற்றது. வத்தலக்குண்டில் ராயல் கால்பந்தாட்ட கழகம் சார்பில் 18ம் ஆண்டு மாநில அளவிலான ஐவர் கால்பண்ட்து போட்டி நடத்தப்பட்டது. இதில், தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், வத்தலக்குண்டு அணியும், தேனி அணியும் மோதின. ஆட்டத்தின் இறுதியில் 4 - 1 என்ற கோல் கணக்கில் தேனி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.