முதல் டி20 போட்டி - வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி குவாலியரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. 19.5 வது ஓவரில் அந்த அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 128 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்தியாவின் சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். 11.5-வது ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

Night
Day