மும்பையை வீழ்த்திய சென்னை அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 29வது போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பவுலிங் செய்வதாக தீர்மானித்தார். இதையடுத்து தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ரஹானே 5 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் டூபே ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கெய்க்வாட் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர் விளாசி 69 ரன்னில் வெளியேறிய நிலையில், 38 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 66 ரன்களுடன் ஷிவம் டூபே ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் நட்சத்திர நாயகன் தோனி, 4 பந்துகளில் 3 சிக்சருடன் 20 ரன்னை எடுத்து ரசிகர்களை அசர வைத்தார். 20 ஓவரில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்த நிலையில், மும்பை அணி சார்பாக பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்த களமிறங்கிய மும்பை அணி தொடக்க ஆட்டகாரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில், தேனீர் இடைவேளைக்கு பிறகு மும்பை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார். இருப்பினும் மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 63 பந்துகளில் 5 சிக்சர், 11 பவுண்டரியுடன் 105 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 20 ஓவரில் மும்பை அணியினர் 186 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றிபெற்றது. இதில் சிறப்பாக பந்து வீசிய சென்னை அணி வீரர் மதிஷா பத்திரானாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Night
Day