மும்பை அணியின் 10வது -11வது வீரர்கள் சதமடித்து சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பரோடா அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியின் 10வது வீரரான தனுஷ் கோட்டையனும், 11வது வீரரான துஷார் தேஷ்பாண்டேவும் சதம் அடித்து சாதனை படைத்தனர். பரோடா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிப்போட்டியில் 2வது இன்னிங்சில் இருவரும் மகத்தான சாதனை படைத்தனர். 337 ரன்களும் 9 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்த போது ஜோடி சேர்ந்த 10வது வீரர் தனுஷ் கோட்டையனும், 11வது வீரரான துஷார் தேஷ்பாண்டேவும் அதிரடியாக ஆடி சதம் அடித்து சாதனை படைத்தனர். தனுஷ் கோட்டையன் 129 பந்துகளில் 120 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், துஷார் தேஷ்பாண்டே 129 பந்துகளில் 123 ரன்கள் குவித்து அவுட்டானார். இதற்கு முன் கடந்த 1946 ஆம் ஆண்டு சர்ரே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10வது வீரராக களமிறங்கிய சந்து ஷர்வட்டே மற்றும் 11வது வீரராக களமிறங்கிய ஷுட்டே பானர்ஜி சதமடித்து சாதனை படைத்திருந்தனர். தற்போது 78 ஆண்டுகள் கழித்து தனுஷும், துஷாரும் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.

Night
Day