யூரோ கோப்பை - சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 2க்கு ஒன்று என்ற கோல் கணகக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணிசாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் போட்டியில், இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் முனைப்பில் தீவிரமாக விளையாடின. இருப்பினும் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போடாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கினர். இந்த நிலையில் போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்தின் 47 மற்றும் 86வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர்கள் கோல் போட்டு அசத்தினர். இதற்கு இங்கிலாந்து அணி சார்பாக 73வது நிமிடத்தில் ஒரே ஒரு கோல் மட்டுமே போட முடிந்ததால், 2க்கு ஒன்று என்ற கோல் கணகக்கில் ஸ்பெயின் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியை வென்றதன் மூலம் நான்காவது முறையாக யூரோ கோப்பையை ஸ்பெயின் அணி வென்றுள்ளது.

Night
Day