ரஞ்சி அரையிறுதியில் தமிழக அணி தோல்விக்கு கேப்டனின் முடிவே காரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழக அணி தோல்வியை தழுவ கேப்டன் சாய் கிஷோரின் முடிவே காரணம் என தமிழக அணி பயிற்சியாளர் சுலக்‌ஷன் குல்கர்னி குற்றம் சாட்டியுள்ளார். அணி பயிற்சியாளர் என்பதுடன், மும்பையை சேர்ந்தவர் என்ற முறையில் ஆடுகளம் குறித்து எடுத்துரைத்தும் சாய் கிஷோர் தவறான முடிவை எடுத்ததாக சுலக்‌ஷன் குல்கர்னி சாடியுள்ளார். டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வது சிறந்தது எனக்கூறிய போதிலும், சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்ததால் தமிழக அணி தோல்வியை தழுவியதாக சுலக்‌ஷன் குல்கர்னி குற்றம் சாட்டியுள்ளார். முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்ததால் தமிழக அணியின் தோல்வி காலை 10.30 மணிக்கே முடிவாகிவிட்டதாக தெரிவித்த சுலக்‌ஷன் குல்கர்னி, சர்வதேச போட்டிகளிலேயே தொடக்க வீரர்கள் முதல் 10 ஓவர்களில் திணறும் நிலையில், டாஸை வென்று பேட்டிங் செய்தது தான் தோல்விக்கு காரணம் என சுட்டிக்காட்டி உள்ளார்.

Night
Day