இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 445 ரன்களும், இங்கிலாந்து அணி 319 ரன்களும் எடுத்தன. 126 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 3வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 4வது நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடங்கிய நிலையில், சுப்மன் கில் 91 ரன்களில் ரன் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். குல்தீப் யாதவ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்று Retried Hurt ஆன ஜெய்ஸ்வால், இன்று மீண்டும் களமிறங்கி 231 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் குவித்த நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தை இந்தியா டிக்ளேர் செய்தது. 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணி பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, 122 ரன்களுக்கு சுறுண்டது. அபாரமாக பந்து வீசி ஜடேஜா 5 விக்கெட்களையும், குல்துப் யாதவ் 2 விக்கெட்களையும், பும்ரா, அஸ்வின் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம், 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.