ராமநாதபுரம்: அரியநாச்சி முளைக்கொட்டு திருவிழா - மாநில அளவிலான கபடி போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் அருகே ஒரு ரூபாய் நுழைவு கட்டணத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. ஒரு ரூபாய் நுழைவு கட்டணத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 47 அணிகள் பங்கேற்றன. இதற்காக சென்னை திருச்சி மதுரை புதுக்கோட்டை சேலம் கன்னியாகுமரி தேனி திண்டுக்கல் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் வருகை தந்தனர். வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Night
Day