எழுத்தின் அளவு: அ+ அ- அ
ரோகித் சர்மா, விராட் கோலியை விமர்சித்த ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய அணி மீது கவனம் செலுத்த வேண்டும் என கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.
இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனதால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலி 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளதாகவும், மற்றொரு வீரராக இருந்திருந்தால் அணியில் இடம் பிடித்திருக்க மாட்டார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஆலன் பார்டர் -கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்றது. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் அணியுடன் ரிக்கி பாண்டிங்கிற்கு என்ன தொடர்பு என்றும், ரோகித், விராட் கோலி பற்றி அவர் கவலைப்படாமல் ஆஸ்திரேலிய அணி பற்றி சிந்திக்க வேண்டும் என பதிலடி கொடுத்தார்.