ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேற்கிந்திய தீவு - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2வது டி20 போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மேக்ஸ்வெல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 120 ரன்களை குவிதார். இதனையடுத்து, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ரன்களை அடித்த வீரரான சூர்யகுமாரின் சாதனையையும் முறியடித்து மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார். 

varient
Night
Day