லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது. இதில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்கவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக லக்னோ அணி கேப்டன் ரிஷப்பண்ட் மீது ஐ.பி.எல். விதிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Night
Day