லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்வரும் ஐபிஎல் டி20 தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 18-வது சீசன் வரும் மார்ச் மாதம் 21ம் தேதி தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் மாதம் 24, 25 தேதிகளில் நடைபெற்றது. இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற  சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல். தொடருக்கான லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக, அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Night
Day