எழுத்தின் அளவு: அ+ அ- அ
கும்பமேளா கூட்டத்தால் வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வரும் தங்களை அழைத்துவர தமிழக அரசு உதவ வேண்டும் என மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னிந்திய அணி சார்பில் தமிழகத்திலிருந்து 6 வீரர்கள் மற்றும் அணி மேலாளர் கலந்துகொண்டனர். இந்நிலையில், போட்டிகள் நிறைவடைந்த நிலையில் தமிழகம் திரும்புவதற்காக வீரர்கள் நள்ளிரவு ஒரு மணியளவில் கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக காத்திருந்தனர்.
அப்போது ரயிலில் கும்பமேளா பயணிகள் முண்டியடித்து ஏறியுள்ளனர். இதனால், மாற்றுத்திறனாளிகள் வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியாமல் வாரணாசி ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு வாரணாசியில் தவித்து வரும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அணியின் கேப்டன் சச்சின் சிவா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.