வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், வினேஷ் போகத் சாம்பியனுக்கும் சாம்பியன் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் வினேஷ் போகத்தால் இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதனைதொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான பி.டி. உஷாவிடம், வினேஷ் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து கேட்டறிந்த பிரதமர், வினேஷ் போகத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் செய்ய முடிந்த உதவிகளை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். 

Night
Day