வினேஷ் போகத் தகுதி நீக்கம் - கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம் - மன்சுக் மாண்டவியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒலிம்பிக் விதிகளின்படி உடல் எடை அதிகம் இருந்த காரணத்தினால் வினேஷ் வெளியேற்றப்பட்டு இருப்பதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் விளையாட இருந்ததாகவும் ஆனால் 50 கிலோ எடை பிரிவில் விளையாட வேண்டிய அவரின் உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்ததால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கு, இந்திய ஒலிம்பிக் கமிட்டி கடும் எதிர்ப்பை பதிவு செய்திருப்பதாகவும், பிரதமர் மோடியிடம் இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பி.டி உஷா விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மன்சூக் மண்டாவியா, வினேஷ் போகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். 

Night
Day