வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்காக மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சோலிசிட்டர் ஜெனரலுமான ஹரிஷ் சால்வே வாதாடுகிறார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். போட்டி நாளன்று காலையில் நடைபெற்ற எடை பரிசோதனையில், அவர் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான சமரச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதால், தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று நண்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வினேஷ் போகத்துக்காக மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வாதாடுகிறா. 

varient
Night
Day