விம்பிள்டன் பட்டத்தை தட்டிச் சென்றார் அல்காரஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் தக்க வைத்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், இளம் வீரரான 21 வயது கார்லோஸ் அல்காரசும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-க்கு 2, 6-க்கு 2, 7-க்கு - 6 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடந்த ஆண்டும் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day