விராட் கோலி தாயார் உடல்நிலை குறித்து பரவிய தகவல் வதந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விராட் கோலியின் தாயார் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு அவரது சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக இந்திய வீரர் விராட் கோலி அறிவித்தார். விராட் கோலியின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தான் அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், தங்களது தாயார் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது தாயார் உடல்நிலை குறித்து பரவி வரும் தகவல்கள் வதந்தி எனவும், அவர் நலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். 

Night
Day