எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிஃபா கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிப் போட்டியில் கத்தார் அணி இந்திய அணியை ஏமாற்றி கோல் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள ஆசிய அணிகளை தேர்வு செய்ய 2ம் கட்ட தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று இருந்த இந்தியா மற்றும் கத்தார் அணிகள் நேற்று மோதின. முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கத்தார் அணியின் யூசுப், 73வது நிமிடம் ஒரு கோல் அடிக்க 1-1 என்று ஆட்டம் சமநிலையில் இருந்தது. 83வது நிமிடத்தில் எல்லை கோட்டை தாண்டிய பந்தை, மீண்டும் உள்ளே கொண்டு வந்து கத்தார் அணியினர் கோல் அடித்தனர். விதிகளை மீறி நடுவர் கத்தார் அணிக்கு ஆதரவாக செயல்பட்டதன் மூலம், 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதமூலம், உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. இந்நிலையில், கத்தார் அணியினர் ஏமாற்றி அடித்த கோல் வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.