2ஆம் நாள் ஆட்ட முடிவில் 400 ரன்களை கடந்தது ஆஸ்திரேலியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய அணிக்‍கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அதிரடியாக சதம் விளாசி அசத்த 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 405 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. முதல் நாளில் ஆட்டம் ​மழை காரணமாக தடைபட்டநிலையில் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே இன்று ஆட்டம் தொடங்கியதால், ஆஸ்திரேலியா அணி வீரர்கள் வேகமாக ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களிலும் டிராவிஸ் ஹெட் 152 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். இவ்விருவரின் பொறுப்பான ஆட்டத்தால் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Night
Day