2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. 

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.  இதனையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். இருப்பினும் களத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 72 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில் இந்திய அணி 19 புள்ளி 2 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Night
Day