எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த முறை பாரிசில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில் 206 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பில் தடகளம், டேபிள் டென்னிஸ், ஹாக்கி உள்ளிட்ட 16 பிரிவு போட்டிகளில் 117 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், ஒலிம்பிக்கில் முதன் முறையாக தேசிய கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்தி செல்ல உள்ளார். அதேபோல் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இளவேனில் வாலறிவன் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும், விஷ்ணு சரவணன் பாய்மர படகு போட்டியிலும் பங்கேற்க உள்ளனர். இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளி விளக்கு மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் பிரம்மாண்டமாக ஒலிம்பிக் தொடங்க உள்ளது.