3-வது டெஸ்டில் ஃபாலோ-ஆனை தவிர்த்த இந்திய அணி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவரும் இந்திய அணி போராடி ஃபாலோ ஆனை தவிர்த்தது. 


இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் என்ற ஸ்கோருடன் இன்றைய 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்த இந்திய அணி ஒரு கட்டத்தில் ஃபாலோ ஆன் பெறும் நிலையில் இருந்தது. ஃபாலோ ஆனை தவிர்க்க 246 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த நெருக்கடியில் இருந்து தப்பிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. கே எல் ராகுல் 84 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும் எடுத்தனர். தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 193 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

Night
Day