3-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றிய கொல்கத்தா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில், அதில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அந்த அணியின் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தினர். முடிவில் 18 புள்ளி 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஹைதராபாத் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் கொல்கத்தா சார்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர் எளிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வீரர்கள் 10 புள்ளி 3 ஓவர்களில் 114 ரன்களை எடுத்து போட்டியை வென்றனர். இப்போட்டியை வென்றதன் மூலம் கொல்கத்தா அணி 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன்மூலம் 3வது முறையாக கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்று முத்திரைப்பதித்துள்ளது.

varient
Night
Day