4 முறை உலக சாம்பியனை வீழ்த்திய வினேஷ் போகத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் 11 ஆவது நாளான இன்று மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் - உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வினேஷ் போகத், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான யுய் சுசாகியை 3க்கு இரண்டு என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறியுள்ளார். 

Night
Day