52 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இந்திய அணி அசத்தல் வெற்றி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேற்றைய பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 52 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஹாக்கி அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்தது. கடைசியாக 1972ஆம் ஆண்டு முனிச்சில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலியா ஹாக்கி அணியை வீழ்த்திய இந்தியா, 52 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. 

Night
Day