6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. 

துபாயில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிடா தர் 28 ரன்கள் எடுத்தார். அடுத்து 106 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 18 புள்ளி 5 வது ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 32 ரன்களும், கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 29 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 23 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

Night
Day