8 விக். வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வரலாற்று வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. கொல்கத்தாவில் நடைபெற்றை நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச, பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் சுனில் நரைன், சால், வெங்கடேஷ் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. 262 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஜானி பேர்ஸ்ட்ரோ, ஷசாந்த் சிங் உள்ளிட்ட பந்துகளை நாலாபுறமும் பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டு அசத்தினர். இறுதியில் பஞ்சாப் அணி 18 புள்ளி 4 ஓவரிலேயே 262 ரன்கள் குவித்து வரலாற்று வெற்றி பெற்றது.

Night
Day