BBC-யின் இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு விருது

எழுத்தின் அளவு: அ+ அ-

2024ம் ஆண்டுக்கான பிபிசி சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது தமிழக வீராங்கனை துளசிமணி முருகேசன் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டது. 

பிரபல ஆங்கில ஊடகமான பிபிசி, இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருது வழங்கியுள்ளது. டெல்லியில்  நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது, ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு வழங்கப்பட்டது. இதே போன்று பாரா துப்பாக்கிச் சுடுதலில் படைத்த வரலாற்று சாதனைக்காக அவ்னி லேகராவிற்கு பிபிசி பாரா-விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாரிசில் நடந்த பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளி வென்ற துளசிமணி முருகேசனுக்கு Best Star Performer of the Year Award வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேட்டி அளித்த தமிழக வீராங்கனை துளசிமணி முருகேசன், தமிழ்நாட்டில் இருந்து வந்து விருது வாங்கியது மிகவும் மகிழ்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

varient
Night
Day