FIA சான்றிதழ் பெறவில்லை-ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா

எழுத்தின் அளவு: அ+ அ-

 ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
 
சென்னை தீவுத்திடலைச் சுற்றி, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அதேசமயம், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை, பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. மழை காரணமாக பந்தயச் சாலையை ஆய்வு செய்து சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனிடையே தலைமை நீதிபதி டெல்லி சென்று இருப்பதால் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் சி.சரவணன் அமர்வு விசாரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தகுதி சுற்று போட்டி 2.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், எப்.ஐ.ஏ.சான்று  கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் போட்டியில் பங்கேற்க முடியாமல் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் வீரர்கள் தங்களது தங்கும் விடுதிக்கு அனுப்பப்பட்டனர்.

Night
Day