"இளநீர் With LAYS" உங்க சேட்டைக்கு அளவே இல்லையா!! மெர்சலாக்கும் வினோத உணவுகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒருபக்கம் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்துக்கொண்டிருக்க மறுபக்கம் நாங்கள் மட்டும் என்ன சும்மாவா என்ற ரேஞ்சுக்கு வினோத உணவுகள் என்ற பேரில் சிற்றுண்டி உணவகங்கள் செய்யும் அட்ராசிட்டி எல்லையே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அப்படி சமீபத்தில் நெட்டிசன்களை வீடியோ மூலமே வாந்தி எடுக்க வைத்த ஒரு வினோத உணவை பற்றி விரிவாக பார்க்கலாம்..  

நண்ட நோண்டி ஆம்லெட் போட்ட காலம் மாறி ஃபேன்டா-வை ஊற்றி ஆம்லெட் போடும் காலம் இது..! இப்படி மாறிப்போன காலத்தில் வினோத உணவுகள் என்ற பேரில் சாலையோர சிற்றுண்டி உணவகங்களின் சேட்டைகள் நெஞ்சடைப்பையே ஏற்படுத்தும் ரகமாக உள்ளது.!

படபடவென சீறும் எண்ணெய்யில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் குளுகுளு ஃபேன்டா-வை மிதக்கவிட்டு மசாலாவை போட்டு செய்யப்படும் ஃபேன்டா ஆம்லெட் நம்மில் பெரும்பாலானோருக்கு குமட்டலை ஏற்படுத்தினாலும் குஜராத் மாநிலத்தில் இது FAMOUS மாலை நேர சிற்றுண்டி என்பது தான் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை..!

அதுமட்டுமா.. தண்ணீருக்கு பதில் ஃபாண்டா-வை கொதிக்கவைத்து செய்யப்படும் மேகி நூடுல்ஸ், காரசாரமாக செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் மீது சாக்லேட்டை ஊற்றிக்கொடுக்கும் சாக்லேட் மேகி, ஓரியோ பிஸ்கட்டை கடலை மாவில் தோய்த்து எண்ணெய்யில் வறுத்தெடுக்கப்படும் ஓரியோ பக்கோடா, பானி பூரியில் பானிக்கு பதிலாக பட்டர் சிக்கன் ஊற்றி கொடுக்கப்படும் பட்டர் சிக்கன் பானி பூரி என பலவகை வினோத உணவுகளுக்கு தனி FAN BASE இருந்தாலும் அனைத்துமே கண்ராவி ரகம் என்பது தான் உண்மை..!

பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து போட்டு அதில் இளநீரை ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து, சாரல் மழை போல மிளகுத்தூளை தூவி இளஞ்சூட்டில் பொறித்தெடுக்கப்படும் இளநீர் ஆம்லெட் என்ன கொடுமை சார் இது என்றே கேட்க தோன்றும்.

அதிலும் சுடசுட பிரியாணி செய்து அதில் டாப்பிங்-ஆக NUTELLA-வை ஊற்றி தரும் nutella briyani-யை பார்க்கும் போதே பலருக்கும் குமுட்டலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. 

அதுமட்டுமா.. ஜீரா சொட்ட சொட்ட நாக்கில் எச்சில் ஊறும் ரசகுல்லாவை எடுத்து அதை இரண்டாக பிளந்து பலதரப்பட்ட சேட் மசாலாக்களை தூவி அதுக்கு மேல் மையோனஸை ஊற்றி போதாகுறைக்கு முந்திரியையும் பாதாமையும் டாப்பிங்சாக சேர்த்து கொடுக்கப்படும் ரசகுல்லா சாட் வேற ரகம் என்றே சொல்ல வேண்டும்.. 

அதன் வரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பது இளநீர் WITH LAYS..! LAYS பாக்கெட்டை கிழித்து அதில் இருக்கும் காரசார உருளைக்கிழங்கு சிப்சுக்கு மேல் இளநீரை ஊற்றி செய்யப்படும் இளநீர் WITH LAY தான் வினோத உணவுகள் மெனு பட்டியலின் லேட்டஸ்ட் UPDATE...

அத்தோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை அதுக்கு மேலே வழுக்கை தேங்காயை சுரண்டி அதில் போட்டு கொடுத்தது தான் நெட்டிசன்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. 

இந்த வீடியோ இணையத்தில் 30 லட்சம் பார்வையாளர்களை தாண்டிய நிலையில் அந்த தேங்காய்க்கு யாராவது நீதி வாங்கி கொடுங்க என்றும் டேய் இதெல்லா அந்த ஆண்டவனுக்கே அடுக்காதுடா என்றும் ஆத்திரத்தை கமெண்டுகளாக கொட்டி தீர்த்துள்ளனர் நெட்டிசன்கள்..  

Night
Day