"கல்யாணமான அன்றே குழந்தை பொறக்குமா" திமுக எம்.பி-யின் ஆபாச பேச்சு.. பட்டும் திருந்ததாத உ.பிக்கள்..

எழுத்தின் அளவு: அ+ அ-

மத குறியீடுகளை ஆபாசத்தோடு ஒப்பிட்டு பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியது குறித்து அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றமே முன்வந்து உத்தரவிட்டிருக்கும் நிலையில் அந்த லிஸ்டில் லேடஸ்டாக இணைந்திருக்கிறார் திமுக எம்பி கல்யாணசுந்தரம். 

ஆபசமாகவும் பெண்ணைகளை கொச்சைப்படுத்தியும் பேசும் திமுகவினர் மீது வழக்குப்பதிய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த திமுக கூடாரத்தின் மீதும் FIR போடும் அளவுக்கு லிஸ்ட் நீளும் என்பது தான் நிதர்சனமான உண்மை..!

சைவ மற்றும் வைணவ குறியீடுகளை ஆபாசமாக சித்தரித்து அதை விலைமாதுக்களின் மீது திணித்து முகம் சுளிக்கும் பேச்சை பெண்கள் முன்னிலையிலேயே பொதுமேடையில் ரசித்து ரசித்து பேசியவர்தான் அமைச்சர் பொன்முடி.! அவரது பேச்சு பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கைக்கு உரிய சைவ மற்றும் வைணவ குறியீடுகள் மீதான அருவருக்கதக்க வன்மத்தையே காட்டும் விதமாக இருந்தது. அதுமட்டுமின்றி சந்தர்ப்ப சூழ்நிலையால் அவல நிலைக்கு ஆளான விலைமாதுக்களின் வாழ்வியலை மிககேவலமான முறையில் இழிவுப்படுத்தியதோடு, பெண்கள் முன்னிலையில் ஒரு சொட்டு அளவுக்கு கூட கண்ணியம் இல்லாமல் நடந்துக்கொண்ட அமைச்சர் பொன்முடியின் போக்கு மக்களை பெரும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியது.

இப்படிப்பட்ட சூழலில் தான் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடியின் ஆபாச பேச்சை நீதிமன்றத்தில் ஒளிபரப்பு செய்த நீதிபதி, பொன்முடியின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது என்றும் அமைச்சர் பதவி வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா? என்றும் கடுமை காட்டினார். 

வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதி சாட்டையை சுழற்றியதை தொடர்ந்து பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது காவல்துறை.

இப்படி உயர்நீதிமன்ற நீதிபதியின் சாட்டையடியால் வலி தாங்க முடியாமல் துடித்த விளம்பர திமுக முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணியத்துடன் பேசுங்கள் என தனது அமைச்சரவை சகாக்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் வைத்தே பணிவான வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நீதிபதியிடம் வாங்கிய சாட்டையடியின் வலி கூட மறையவில்லை அதற்குள் ஆபாச நெடி தூக்கலாக வீசும் அளவுக்கு திமுக எம்பி கல்யாணசுந்தரம் பேசிய பேச்சு, நீங்க திருந்தவே மாட்டீங்க என்ற ரீதியில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பி கல்யாணசுந்தரம், அனைவருக்கும் எல்லாம் உடனே கிடைத்துவிடாது என்ற ஆழமான கருத்தை எளிதாக புரியவைக்கிறேன் என்ற பேரில் ஆபாசத்தையும் புகுத்தி பேசிய பேச்சுகள் ஆபாசம் என்பது திமுகவின் DNA-விலேயே ஊறிப்போன ஒன்று என்பதற்கு சாட்சியாக இருந்தது.

திருமணம் ஆனால் கூட பத்து மாதம் பொறுத்து இருந்தால் தான் குழந்தை பிறக்கும், திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடிந்த உடனேயோ குழந்தை பிறக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் மட்டும் தான் அது நடக்கும் என பொதுமக்கள் முன்னிலையில் அருவருக்கதக்க அநாகரீகத்தை 80 வயதை கடந்த ஒரு திமுக எம்.பி. கட்டவிழ்த்துவிட்டிருப்பதை பார்க்கும் போது திமுக எந்தளவுக்கு தரம் தாழ்ந்த கட்சி என்பது விளங்கும்.

அமைச்சர் பொன்முடியின் பேச்சால் மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது திமுக எம்.பி கல்யாண சுந்தரத்தின் பேச்சு பொதுமக்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது. தொடர்ந்து அருவருக்கத்தக்க வகையில் செயல்படும் திமுக ஆட்சியை மக்கள் அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே விவரம் அறிந்தவர்களின் கணிப்பாக உள்ளது. 

Night
Day