அடுத்த SURGICAL STRIKE-க்கு தயாராகுமா இந்தியா..!

எழுத்தின் அளவு: அ+ அ-

காஷ்மீரில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்த surgical strike-க்கு இந்தியா தயாராகுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் எல்லை வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்வது பல ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளில் இதுவரை 267 பேருக்கும் மேற்பட்டோர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2000 ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டம் சட்டிசிங்போரா கிராமத்தில் சிறுபான்மை சீக்கிய இனத்தவர் மீது நள்ளிரவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 36 பேர் கொல்லப்பட்டனர். 

2000 ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதத்தில் நுன்வான் முகாமில் தங்கி இருந்த அமர்நாத் யாத்ரீகர்கள் 24 பேர் உள்பட 
32 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனந்த்நாக் மாவட்டம் ஷெஷ்நாக் முகாமில் இருந்த அமர்நாத் யாத்ரீகர்கள்
13 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

2001 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஸ்ரீநகரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்துக்குள் புகுந்த 
தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

2002 ஆம் ஆண்டு சந்தன்வாரி அடிவாரத்தில் உள்ள முகாமில் தங்கி இருந்த அமர்நாத் யாத்ரீகர்கள் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். 

2002 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் லோயர் முண்டா பகுதியில் 
பயங்கரவாதிகள் வைத்திருந்த ரிமோட் குண்டு வெடித்ததில் 2 குழந்தைகள், 3 பெண்கள்,  9 ராணுவ வீரர்கள்
உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

2003 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி பயங்கரவாதிகள் புல்வாமா மாவட்டம் நந்திமார்க் கிராமத்தில் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள், 11 பெண்கள் உள்பட 24 காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டனர்.

2005 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி புல்வாமாவில் உள்ள சந்தைப்பகுதியில் குண்டுகள் நிரப்பிய காரை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்ததில் 2 பள்ளி குழந்தைகள், 3 சிஆர்பிஎப் அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேபாளம் மற்றும் 
பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.

2017 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பயங்கரவாதிகள் குல்காமில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற 
பேருந்தில் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

2019 ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் 
வீரமரணம் அடைந்தனர். 

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்களை அழித்ததுபோல் மீண்டும் ஒரு Surgical Strike தாக்குதலை இந்தியா நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

Night
Day