அண்ணா மார்க்கெட்டில் குப்பைக்கு வரி..! குமுறும் வியாபாரிகள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

போதிய அடிப்படை வசதி இல்லாத கோவை அண்ணா மார்க்கெட்டில், உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒப்பந்ததாரர்களுக்கு இணக்கமாக கோவை மாநகராட்சி மற்றும் மத்திய மண்டல அலுவலகம் செயல்பட்டு வருவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டியுள்ளது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில், 37 ஆண்டுகளாக அண்ணா தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இங்கு கடை நடத்தி வரும், 476 வியாபாரிகளை பாதிக்கும் வகையில், கடந்த 2021-ம் ஆண்டு கடை வாடகையை மாநகராட்சி உயர்த்தியது. 

உயர்த்தப்பட்ட கட்டண அடிப்படையில், மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக பொது ஏலம் நடத்தியதில், 2024ம் ஆண்டு முதல் 2 கோடியே 50 லட்சத்து ஆறாயிரம் ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.

இந்தநிலையில், தற்போது வியாபாரிகளுக்கு தினசரி கடை வாடகையாக 150 ரூபாயும், பத்து ரூபாய்க்கு குப்பை வரியும் நிர்ணயித்திருப்பதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாடகை உயர்வை மாநகராட்சி நிர்வாகம் மறு பரிசீலனை செய்து செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே 6க்கு-6 அளவுள்ள கூரை கடைக்கு இருபது ரூபாயும், 5க்கு-6 அளவுள்ள நிரந்தர திறந்த வெளி கடைக்கு 50 ரூபாய் செலுத்தி வருவதாகவும், தற்பொழுது கட்டணத்தை உயர்த்தினால், 20 ரூபாய் செலுத்த வேண்டிய இடத்தில் 150 ரூபாய் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது கோவை மாநகராட்சி வாடகையை உயர்த்தியுள்ளது, 40 வியாபாரிகளுக்கு சாதமாகவும், 400-வியாபாரிகளுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளதாக வியாபாரிகள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேபோல அண்ணா மார்க்கெட் வளாகத்தில் 476 கடைகள் இருக்கும் பட்சத்தில் 80 கடைகள் மட்டுமே தற்போது கட்டி முடித்து திறக்காமல் இருப்பதாகவும், வளாகத்தில் போதிய சாலை வசதி, என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதிதாக கட்டப்பட்ட கழிப்பிடத்தை திறக்காமல் இருப்பதால் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே, சிறுவணிகர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள்,  பாதிப்படைந்துள்ள நிலையில், புதிய கடைகள் புனரமைக்கப்பட்ட பின், மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் அனைத்து சட்ட உரிமைகளுக்கும்  கட்டுப்படுவோம் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day