எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளம்பர திமுக அரசால் கொண்டு வரப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான அப்பா செயலி தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. நெட்டிசன்களின் கேலிக்கும் விமர்சனத்துக்கும் அப்பா செயலி ஆளானதன் காரணம் என்ன பார்க்கலாம் விரிவாக...
தமிழ்நாட்டு மாணவர்களிடையே அப்பா-வை பிரபலப்படுத்துகிறேன் என்ற பேரில் விளம்பர திமுக அரசு செய்த காரியம் ஒன்று இணையத்தில் OG TROLL MATERIAL-ஆக மாறி இருப்பது தான் சம்பவமே..!
தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள் தன்னை அப்பா அப்பா என வாய்நிறைய அழைப்பதாக தனக்கு தானே சிலாகித்துக்கொண்ட விளம்பர திமுக முதலமைச்சரின் சமீபத்திய வீடியோ இளைஞர்களிடையே எப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக முதலமைச்சரின் ’அப்பா’ ஸ்டண்டை கலாய்த்து இணையத்தில் நெட்டிசன்கள் அள்ளி தெளித்த மீம்ஸ்களே அதற்கு சாட்சி.
அதுவும் திமுக முதலமைச்சர் தன்னை தானே கேள்வி கேட்டுக்கொண்டு தனக்கு தானே வீடியோ ஷூட் நடத்திக்கொண்டது எல்லாம் வேற ரகம் என்றே சொல்ல வேண்டும். அதில் தலைவர், முதல்வரை தாண்டி தற்போது அப்பா என்னும் பரிநாம வளர்ச்சியை அடைந்திருப்பது குறித்து தனக்கு தானே சிலாகிக்கும் திமுக முதலமைச்சர், இன்றைய இளைய தலைமுறை தன்னை அப்பா என்று அழைப்பதை கேட்கவே ஆனந்தமாக இருப்பதாக வராத சிரிப்பை வரவழைத்து தனக்கு தானே பதிலளித்துக் கொண்ட வீடியோ நெட்டிசன்களின் TROLL CONTENT-ஆக மாறியது ஊரறிந்த ஒன்று...
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் கடலூரில் நடைபெற்ற 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழாவில், 'அப்பா' என்ற புதிய செயலியை வெளியிட்டார் வீடியோ ஷூட் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்தநிலையில் தான் அதையும் தாண்டி OG TROLL MATERIAL-ஆக மாறி இருக்கிறது சமீபத்திய சம்பவம் ஒன்று. Anaithu Palli Parent teachers Association என்ற செயலியின் பெயரை அப்பா என சுறுக்கியது தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதாவது அப்பா என்னும் பிராண்டை மாணவர்களிடையே புரோமோட் செய்யும் நோக்கில் அனைத்துப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் என்னும் பெயரை தமிழ் ஆங்கிலம் என கலவையாக்கி Anaithu Palli Parent teachers Association என்ற மொழி கதம்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது விளம்பர திமுக அரசு. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என தமிழ் மொழியை காக்க வந்த தேவ தூதர்கள் போல தங்களை காட்டிக்கொள்ளும் திமுக இப்படி அப்பா என்னும் வெற்று பிம்பத்தை மாணவர்கள் மீது திணிக்க செய்த காரியம் மக்களை தலையில் அடித்துக்கொள்ள வைத்துள்ளது.
அதிலும் Anaithu Palli Parent teachers Association என்பதன் சுறுக்கம் APPTA என்பதே என்ற நிலையில் அப்பா என்ற சொல்லை செயலியின் பெயர் சுருக்கமாக வைக்க வேண்டும் என்பதற்காக teachers என்ற வார்த்தையையே விடுத்து, Anaithu Palli Parent Association என்பதை செயலியின் பெயர் சுருக்கமாக APPA app என வைத்திருப்பது திமுக அரசுடைய விளம்பர அட்ராசிட்டியின் உச்சம் என்றே சொல்லும் அளவுக்கு உள்ளது.
அப்பா செயலி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அது அப்பா ஆப் அல்ல உண்மையில் அப்பத்தா ஆப் என விமர்சித்திருந்தார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் டிஎன்எஸ்இடி ஸ்கூல், டிஎன்எஸ்இடி பேரண்ட்ன்ஸ், டிஎன்எஸ்இடி ஸ்டாப் என ஏற்கெனவே 11 ஆப்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் என்பது ஆசிரியர்களின் புலம்பலாகவும் உள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை ஒருபக்கம் குறைந்து கொண்டே போக மறு பக்கம் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியும் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஏராளமான அரசு பள்ளிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால் பல ஆரம்ப பள்ளிகள் கட்டிடமே இல்லாமல் மரத்தடியிலும் அருகாமையில் இருக்கும் அரசு கட்டிடங்களிலும்செயல்படுவது நாளும் செய்திகளாக வந்துக்கொண்டு தான் இருக்கிறது.
இப்படி மாணவர்களின் அடிப்படை உரிமையான கல்விக்கு உயிர் வித்துக்களாக உள்ள அரசு பள்ளிகளின் நிலை ஊசலாடிக்கொண்டிருக்க அதையெல்லாம் விட்டுவிட்டு அப்பா-வை விளம்பரப்படுத்துவதில் அக்கறை காட்டுவதா? என்ற சாமாணிய மக்களின் கண்டன குரலே ஓங்கி ஒலிக்கிறது.