அமைச்சர் மா.சு பங்கேற்கும் அரசு விழா-வசூல் வேட்டையில் சுகாதாரத்துறை அதிகாரிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க உள்ள அரசு விழாவை நடத்த  சுகாதாரத்துறை அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையங்களும் தலா 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற ஆடியோ வைரலாகி வருவது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்காசி மாவட்டத்திற்கு இன்னும் சில நாட்களில் வர உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விழாவினை நடத்துவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனை ஊழியர்களிடம் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒவ்வொரு சுகாதார நிலையத்திற்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், அந்த தொகையை அந்தந்த சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. இது தொடர்பான ஆடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துறை சார்ந்த அரசு விழா நடைபெறுகிறது  என்றால் அதற்கான முழுச் செலவும் அரசு நிதியில் இருந்து செலவிடப்படுவதுதான் வழக்கம். ஆனால் திமுக என்றாலே முறைகேடு என்ற சொல்தான் நினைவுக்கு வரும் நிலையில், எந்த விழாவைத்தான் அவர்கள் விடுவார்கள். அந்த வகையில் தென்காசி மாவட்ட மருத்துவத்துறை ஊழியர்களிடம் வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ஊழலில் ஊறிக் கிடக்கும் சுகாதாரத்துறை, உடன்பிறப்புகளால் மேலும் சீரழிந்து கொண்டு இருக்கிறது.....

Night
Day