அம்பானி இல்ல திருமணவிழா.. நட்சத்திரங்களால் ஜொலித்த மும்பை

எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத்திருமண நிகழ்ச்சியில், உலகெங்கிலும் இருந்து பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் குவிந்து மணமக்கள் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்சண்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பானி இல்ல திருமண விழாவின் தொகுப்பை தற்போது காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்ட்டுக்கும் திருமணம் நடைபெற்றது. மும்பை ஜான் நகரில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திருமண விழாவில், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

திருமண விழாவில், பட்டு வேட்டி சட்டையுடன் நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சவுந்தர்யாவுடன் கலந்துக்கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட கிளாசிக் இந்தி பாடல் ஒன்றிற்கு மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அனில் கபூரும் உற்சாகமாக நடனமாடினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடனும், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடனும் பங்கேற்றனர்.

ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் தங்களின் குடும்பத்தினருடன் அம்பானி இல்லத்திருமண விழாவில் பங்கேற்றனர்.

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட் திருமண நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னுடைய சகோதரி அர்பிதா கானுடன் கலந்துக்கொண்டார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்ஷி, மகள் ஜிவாவுடனும், பிரபல ஹாலிவுட் நடிகரும், WWE மல்யுத்த வீரருமான ஜான் சீனா ஆகியோரும் அம்பானி இல்லத்திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவியுடனும், கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, இஷான் கிஷன் ஆகியோரும் பங்கேற்றனர். 

இதேபோல், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கணவர் நிக் ஜோனசுடன் பங்கேற்றார். சாரா அலிகான், அனன்யா பாண்டே, சஞ்சய் தத், கரண் ஜோகர், அர்ஜூன் கபூர், வருண் தவான், அனில் கபூர், ஜெனிலியா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

முகேஷ் அம்பானி இல்ல திருமண விழாவில், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் குவிந்திருந்ததால் மும்பை மாநகரம் விழா கோலம் பூண்டிருந்தது.

Night
Day