இன்று முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் - விழுப்புரம் மாவட்ட மீனவர்களுக்கு அறிவுறுத்தல் ..!

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, விழுப்புரம் கடலோரப் பகுதிகளான மரக்காணம் எக்கியார்குப்பம், கைப்பாணிக்குப்பம், கூனிமேடுக்குப்பம், அனுமந்தைக்குப்பம், மண்டவாய்க்குப்பம் உள்ளிட்ட 19 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில் தொடர்ந்து 3வது முறையாக மின் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரம் பெருமளவும் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Night
Day