இலங்கை அதிபருக்கு பாரம்பரிய வரவேற்பு..!

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்​தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுக்‍கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான அநுர குமார திசநாயக தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். 3 நாள் அரசு முறை பயணமாக நேற்றிரவு டெல்லி வந்த அவர், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு இலங்கை அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவை வரவேற்றனர். பின்னர் மத்திய அமைச்சர்களை இலங்கை அதிபருக்‍கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிமுகம் செய்து வைத்தார். 

இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இலங்கை அதிபர் ஆலோசனை நடத்தினார். அப்போது, இரு நாடுகளிடையேயான மீனவ பிரச்சினை, இரு நாட்டு உறவை மேம்படுத்துவது, எதிர்கால திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.



Night
Day