உங்க அடிய தாங்கனும்னா குவாட்டரும்... பிரியாணியும்... வேணும்.. போலீசாரிடம் போக்சோ கைதி அலப்பறை!

எழுத்தின் அளவு: அ+ அ-

மூதாட்டிக்கு பாலியல் சீண்டல் கொடுத்து பொதுமக்களின் தர்ம அடிக்கு ஆளாகி போலீசில் சிக்கிய குற்றவாளி போலீசாரிடமே கோழிபிரியாணியும், குவாட்டரும் கேட்டு அலப்பறையை கூட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளது. போதை இளைஞரின் அலப்பறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்...

உங்க அடிய தாங்கனும்னா குவாட்டரும், பிரியாணியும் வாங்கி தாங்க.. இல்லனா நாளைக்கு காலைல நீங்க, கொல கேஸ்ல ஜட்ஜ் அம்மா முன்னாடி கைகட்டி பதில் சொல்ல வேண்டியிருக்கும் என போலீசுக்கு குற்றவாளி வேறு மாதிரி மிரட்டல் விடுத்ததன் காட்சிகள் தான் இது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரனூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஐயப்பன். இவர் மதுபோதையில் கருவேப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்த அவரது காதலியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு இளைஞர் ஐயப்பனை ஊர் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து கருவேப்பிலங்குறிச்சி கவால்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சட்டை பணியன், பேண்டு கிழிந்த நிலையில் இருந்த ஐயப்பனிடம் கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 17 வயது சிறுமியை காதலித்து வீட்டை விட்டு அழைத்துச்சென்றதால் ஐயப்பன் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தான் ஐயப்பன் மீண்டும் தனது காதலியை பார்ப்பதற்காக மது அருந்திவிட்டு சென்றதாகவும் அப்போது வழியில் அமர்ந்திருந்த மூதாட்டியை பார்த்த போது, தனது காதலி என தவறாக நினைத்து கட்டியணைத்துவிட்டதாகவும் கூறியுள்ளான் போதை ஐயப்பன்.

நடந்ததை விவரிப்பதற்கு முன்பாகவே ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து தன்னை கொத்துக்கரி போட்டுவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்த ஐயப்பன், தனக்கு புது பேண்டு, சட்டையும் குவாட்டரும் கோழிபிரியாணியும் வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தான். 

ஏற்கெனவே போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மூதாட்டி என்று கூட பார்க்காமல் பாலியல் சில்மிஷத்தை அரங்கேற்றிய தன்னை போலீசார் இரவு முழுவதும் லத்தியால் வெளுக்க போவது உறுதி என முடிவு செய்த ஐயப்பன்,அதற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள போலீசாரையே குவாட்டரும்.. கோழிபிரியாணியும் வாங்கி வர சொன்னது குற்றவாளிகள் எந்த அளவுக்கு பக்குவப்பட்டுள்ளனர் என்றே சொல்லும் விதமாக இருந்தது.

அதிலும் இன்னைக்கு எப்படியும் அடிச்சி பொளக்க போறீங்க, உங்க அடிய தாங்கனும்னா குவாட்டரும் பிரியாணியும் வாங்கி தாங்க.. இல்லனா நாளைக்கு காலைல நீங்க தான் கொல கேஸ்ல நீதிபதி முன்னிலையில் கைக்கட்டி பதில் செல்ல வேண்டியிருக்கும் என குற்றவாளி ஐயப்பன் போலீசுக்கே செக் வைத்த விதம் எந்த ரகம் என்றே தெரியவில்லை.

பேண்டு, சட்டை கேட்ட ஐயப்பனுக்கு போலீசார் தனது பழைய சட்டையை தர இருந்த நிலையில் அது தனக்கு பத்தாது போய் கடையில் இருந்து புது சட்டை வாங்கி வாங்க என குற்றவாளி ஐயப்பன் போலீஸுக்கே ஆர்டர் போட்டது அடேய் யார்ரா நீ என கேட்கும் அளவுக்கு இருந்தது. 

Night
Day