ஊழலை ஒழிக்க வந்த கமலஹாசனா இது..! எல்லாம் எம்.பி. சீட் படுத்தும்பாடு..!

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக விளம்பர முதலமைச்சரை நேரில் சந்தித்த மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன், முதல்வரை கொண்டாட வந்ததாக பிரஸ் மீட் கொடுத்ததுதான், தற்போது 'இவரா அவர்' என்ற ரீதியில் பல நினைவலைகளை தட்டி எழுப்பியிருக்கிறது. அப்படி அந்த கடந்த கால நினைவலைகளில் திமுகவுக்கு எதிராக கமலஹாசன் காட்டிய ஆவேசத்தையும், தற்போதைய மாற்றத்தையும் விரிவாக பார்க்கலாம்...

ஊழல் திமுக முதலமைச்சர் ஸ்டாலினின் குரலை கேட்டு கையில் இருந்து டார்ச்சை தூக்கி வீசி அந்த டி.வி.-யையே உடைத்து நொறுக்கிய அதே கமலஹாசன் தான் இன்று ஸ்டாலினை கொண்டாடப்படக்கூடிய முதலமைச்சர் என புகழாரம் சூட்டியிருப்பதை பார்க்கும் போது அது வேற வாய் இது நார வாய் என கலாய்க்கும் அளவுக்கு இருக்கிறது. 

இப்படி டி.வியை யெல்லாம் போட்டுடைத்து அரசியல் களத்தில் கால் பதித்தவர் தான் நடிகர் கமலஹாசன். எடுத்தஎடுப்பிலேயே திமுக-வை ஊழல் கட்சி குடும்ப ஆட்சி என்றெல்லாம் வீரவசனம் பேசியவர். ஊழல் கட்சியின் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுகிறேன் என கங்கணம் கட்டிக்கொண்டு அரசியல் களமாட வந்தவர்.போக போக அந்த ஊழல் கட்சியிடமே அடமானம் போகும் நிலைக்கு ஆளானது தான் மிச்சம்.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மையம் வர வேண்டும் என அப்போதைய காங்கிரஸ் மாநில தலைவரான அழகிரி அழைப்பு விடுத்த போது, திமுக ஒரு ஊழல் கட்சி, அந்த கட்சியின் ஊழல் பொதியை எங்களால் சுமக்க முடியாது என கூறி நோஸ்கட் கொடுத்த கமலஹாசன், தற்போது எம்.பி.சீட்டுக்காக கையில் பிச்சை பாத்திரம் ஏந்தாத குறையாக அறிவாலயத்தின் வாசலை நோக்கி நடையாய் நடந்துக்கொண்டிருக்கிறார். 

அதுமட்டுமா.. நானெல்லாம் சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு நிற்கமாட்டேன் அப்படியே சட்டை கிழிந்தாலும் வேறு சட்டை மாற்றிக்கொண்டு தான் வெளியே வருவேன் என நேரடியாகவே ஸ்டாலினை தாக்கி பேசியவர் இன்று ஒற்றை மாநிலங்களவை சீட்டுக்காக ஒற்றை காலில் இடிதாங்கி போல நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

இதற்கெல்லாம் மேலாக மக்கள் நீதி மையம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்கவிழாவில் பேசிய கமல், ஆக்டிவாக இருக்கும்போதே மக்கள் சேவை செய்வேன், சக்கர நாற்காலியில் இருந்துகொண்டு தொந்தரவு செய்யமாட்டேன்' என கூறியிருந்தார். அதை கருணாநிதியை தான் கமல் அவமானப்படுத்துவதாகக் கூறி விளம்பர தி.மு.க தரப்பில் இருந்து எதிர்பு கிளம்பியது. 

அதற்கு நான் கருணாநிதியைக் குறிப்பிடவில்லை; கருணாநிதியை அவமானப்படுத்த 'மு.க.ஸ்டாலின்' எனக் கூறினாலே போதுமானது என திமுக மீதான தனது விமர்சனத்தில் நெடியை தாறுமாறாக கூட்டியிருந்தார் கமலஹாசன்... ஆனால் இன்றோ அதே வாயால் ஸ்டாலினை துதி பாடும் அளவுக்கு மாறியுள்ள காரணம் வேறொன்றும் இல்லை அந்த ஒற்றை எம்.பி. சீட்டு தான். 

முன்னார் திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்த கமலஹாசன், கூட்டணிக்காக காங்கிரஸ்காரர்கள் அறிவாலயத்தின் வாட்ச்மேன்களாக மாறியிருப்பதாக கூறி கிண்டலடித்தார். இப்படியெல்லாம் ஊழல் திமுக-வை தனது விமர்சன கணைகளால் கிழித்து தொங்கவிட்டவர் தற்போது எம்.பி.சீட்டுக்காக திமுகவிடமே கையேந்தி நிற்பதை பார்க்கவே பாவமாக இருக்கிறது. ஊழல் திமுகவிடம் கட்சியை அடமானம் வைத்துவிட்டு அதற்கு ஈடாக எம்.பி.சீட் என்னும் வெற்று வாக்குறுதியை மட்டுமே கமல் பிரதிபலனாக பெற்ற நிலையில் தனது எம்.பி. கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயத்தில் முதல்வருக்கு வாழ்த்து சொல்லுகிறேன் என்ற பேரில், எம்.பி. சீட் வாக்குறுதியை தூசு தட்டிவிட்டு வந்திருக்கிறார் கமலஹாசன் என்பதே அரசியல் பார்வையாளர்களின் விமர்சனமாக உள்ளது. 

Night
Day