எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுக அமைச்சர் பொன்முடியின் அறுவறுக்கதக்க பேச்சால் கட்சியில் அவரது துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்ட உடனேயே எகிறி குதித்து வந்து, மாற்றுத்திறனாளிகள் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் திமுகவின் மற்றோரு அமைச்சரான துரைமுருகன்..! இந்த அளவுக்கு பயத்தை காட்டிய அவரது சர்ச்சை பேச்சு தான் என்ன? விரிவாக பார்க்கலாம்...
திமுகவின் சீனியர் மோஸ்ட் அமைச்சராக இருந்தாலும் அடிக்கடி வாயால் வம்பு வளர்த்து சிக்கலில் சிக்கிக் கொள்ளும் முக்கிய பிரகஸ்பதி அமைச்சர் துரைமுருகன் என்பது ஊறரிந்த ஒன்று.!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுகவின் மூத்த அமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன், எதிர்க்கட்சிகளை கிண்டலடிப்பதாக நினைத்து மாற்றுத்திறனாளிகளை தாக்கிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை மிகவும் கொச்சையாகவும் அறுவறுக்கதக்க வகையிலும் கேலி கிண்டலுக்கு ஆளாக்கி துரைமுருகன் பேசிய பேச்சுக்கள் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து துரைமுருகனை கண்டித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
துரைமுருகன் இவ்வாறு பேசுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. சில நாட்களுக்கு முன்பு திமுக எம்.பி-களை விமர்சித்த மத்திய அமைச்சருக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து வடமாநிலத்தவர்களை மிகவும் கொச்சைப்படுத்தி பேசியிருந்தார் துரைமுருகன்.
கடந்த மாதம் வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய துரைமுருகன், வடமாநிலங்களிலெல்லாம் ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வார்கள் என உண்மைக்கு மாறாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் பொதுமேடையில் பேசியது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.
பொதுமேடையாக இருந்தாலும் சரி முக்கிய பிரச்சனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி, துளியும் மரியாதையே இல்லாமல் மக்களையும் எதிர்தரப்பையும் ஒருமையில் குறிப்பிடுவது, அதிகார மமதையில் அலட்சியமாக பதிலளிப்பது என துரைமுருகனின் செயல்பாடுகள் அனைத்தும் ஆளும் கட்சி என்ற ஆணவத்தின் உச்சமாகவே இருந்ததாக விமர்சனம் எழுந்தது.
அதுமட்டுமின்றி துரைமுருகனின் இழிவுப்படுத்தும் முகபாவனையும், உடல் மொழிகளும் சாமானியர்களை கேவளப்படுத்தும் வகையிலேயே இருப்பதும் மக்களை கோபத்துக்கு ஆளாக்கியது.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுத்து டெல்டா விவசாயிகளை கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வரும் நிலையில் அவர்களின் கண்ணீரை துடைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மேடைக்கு மேடை ஆளும் கட்சி என்ற அதிகார மமதையில் வாக்களித்த மக்களையே சிறுமைப்படுத்தி துரைமுருகன் பேசி வருவது தொடர்கதையாகி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்...
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து பணிகளையும் கர்நாடக அரசு வேகமெடுத்து செய்து வரும் வேளையில் அதை தடுக்க சிறு துறும்பை கூட தூக்கி வைக்க முடியாத அமைச்சராக இருக்கும் துரைமுருகன் மீது விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசின் வஞ்சனைப் போக்கால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளநிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு மீது பழியை போட்டு கைவிரிக்கும் துரைமுருகனின் போக்கு, நீர்வளத்துறைக்கு அமைச்சர் ஒரு கேடு என்ற விமர்சனத்தையும் எழுப்புகிறது.
இந்தநிலையில் தான் இந்து மத குறியீடுகள் மீது ஆபாசத்தை ஏற்றி, அதை பெண்களோடு ஒப்பிட்டு, அந்தரங்கமாக பேசுவதற்கே நா கூசும் அளவுக்கான பேச்சை, பொதுமேடையில் பொன்முடி பேசியது பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற விளம்பர திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கள், தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு அழிவையே ஏற்படுத்தும் என்ற கணக்கிலேயே பதவி பறிப்பு என்னும் கண் துடைப்பு நாடகத்தை விளம்பர திமுகவின் மேலிடம் நடத்தி உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்தே பின்னங்கால் பிடரியில் பட ஓடேடி வந்து, மாற்றித்திறனாளிகள் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
துரைமுருகனின் இந்த மன்னிப்பு நாடகமும் தேர்தலை மையப்படுத்தியே என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும் பொன்முடிக்கு வரிந்துக்கட்டிக் கொண்டு ஆக்ஷனில் இறங்கிய விளம்பர திமுக மேலிடம் துரைமுருகனுக்கு மட்டும் SOFT CORNER காட்டியது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
விளம்பர திமுகவின் ஆட்சி நிர்வாகத்தால், மக்கள் நாளும் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கும் நிலையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வாக்களித்த மக்களையே கொச்சைப்படுத்தி பேசும் திமுக அமைச்சர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போக, வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்களின் மரண அடி நிச்சயம் என்றே கூறப்படுகிறது.