எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை வேளச்சேரியில், திமுக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த போலீஸ் காவலரை மது போதையில் இருந்த திமுகவினர் ஆபாசமாக பேசிய மிரட்டல் விடுத்து தாக்கியதன் சம்பவம் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பந்தோபஸ்துக்கு வந்த காவலரை போதை திமுகவினர் பகிரங்கமாக மிரட்டியதன் காட்சிகள் தான் இது..!
சென்னை வேளச்சேரியில் திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியில் பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டவர் தான் காவலர் காமராஜ். அமைச்சரின் நிகழ்ச்சி என்றாலே திமுகவினர் செய்யும் அலப்பறைகளை சொல்லித்தான் புரியவைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமைச்சரை வரவேற்கிறேன் என்ற பேரில் ஒருபக்கம் சாலையின் கால்வாசி பகுதியை மறித்துக்கொண்டு காது கிழிய பேண்டு வாத்திய கோஷ்டிகள் வாத்தியங்களை முழங்கிக்கொண்டிருக்க மறுபக்கம் சாலையை மறித்தவாறு வாகனங்களை நிறுத்தியும் கூட்டம் கூட்டமாக கூடி நின்றுக்கொண்டும் திமுகவினர் அலப்பறையை கூட்டியதாக தெரிகிறது.
திமுகவினரின் இந்த அட்ராசிட்டிகள் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாக இருக்க அதை முறைப்படுத்தும் பணியில் காவலர் காமராஜ் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அங்கு தலைக்கேறிய மதுபோதையில் சாலையை அளந்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த திமுகவினரை மக்களுக்கும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒதுங்கி இருக்குமாறு காவலர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை திமுகவினர் காவலர் காமராஜ்ஜை ஒருமையிலும் அநாகரீகமான வார்த்தைகளாலும் திட்டியதோடு தாக்கியதாகவும் தெரிகிறது. முழு காவல் சீறுடையில் பணியில் இருக்கும் காவலரையே பொதுமக்கள் கண்முன்னே போதை திமுகவினர் மிரட்டியும், தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டதன் செயல் அங்கிருந்த சாமானியர்களுக்கு அச்சத்தையும் பதைபதைப்பையும் வரவழைத்தது.
தவறு செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் அதிகாரம் படைத்த காவலரை நீ யாருடா என்ன கேட்க ஒழுங்கா போயிடு என திமுக தொண்டர் எகிறிய காட்சி, திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கிறது என்பதன் சாட்சியாக இருந்தது.
குற்றங்கள் நடக்கும் போதெல்லாம் காவல்துறையிடமே பாதுகாப்பு புகலிடம் தேடிய மக்களுக்கு, காவலர் மீது கொஞ்சமும் பயமின்றி திமுகவின் அடிமட்ட கோஷ்டிகள் அதிகார மமதையில் மிரட்டிய தொணி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருக்கும் வரை யாருக்கும் பாதுகாப்பே இல்லை என்பதை சொல்லாமல் உணர்த்தியது.
விளம்பர திமுக முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கே இந்த கதி என்றால் சாமாணியர்களின் நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்ட போதை திமுகவினர் மீது பெயருக்கு கூட நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைக்கப்பட்டது, எப்பேர்பட்ட குற்றத்தை செய்தாலும் திமுக என்ற ஒற்றை அங்கீகாரம் இருந்தால் போதும் குறைந்தபட்சம் விசாரணை கூட இருக்காது என்பதன் உள் அர்த்தத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியது.