கிரிக்கெட் போட்டியின்போது மயங்கி விழுந்து மாணவர் பலி..!

எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் கிரிக்கெட் விளையாடிய மாணவன் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளின் அங்கமாக கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது. அதில் விளையாடிக் கொண்டிருந்த போது மாணவர் ஒருவர் திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக சக மாணவர்கள், ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவ வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day